Sunday, November 21, 2010

அருள் கட்டளை


தன்னை அறிந்தவரே யோகியாவார் 
தன்னை அறிந்தவரே ஞானியாவார் 
தன்னை அறிந்தவரே சித்தியாவார்
தன்னை அறிந்தவரே தெய்வமாவார் 

ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் , ஞானம் ,யோகம்,தவம்,விரதம்,ஜபம்,தியானம் முதலியவகைகளை செய்கின்றவர்கள் கடவுளின் கருணையை சிறிதும் பெறமுடியாது.  அவர்கள் ஆன்ம விளக்கமும் பெற முடியாது. ஜீவகாருண்யம் இல்லாது செய்யபடுகின்ற செயல்கள் எல்லாம் பயன்படாத செயல்களே. நம்மை மயக்குகின்ற செயல்களே என்று வள்ளலால் பெருமான் கூறுகிறார்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் நல்ல ஒழுக்கங்களையும் கருணை நிறைந்த மனதையும், உயிர்குலங்கள் வாழுவதற்கான நல்ல செயல்களையும் செய்துகொண்டு, காலம் உள்ள போதே (வெளிச்சம் ) ஒளிமயமான வாழ்கையை பெற்றுகொள்ள வேண்டும் 

தன்னை அறியாது , ஆசையினால் வாழ்ந்து குணகேடுகளினால் செயல்பட்டு,இருளான வாழ்கையை தேடிகொள்ளகூடாது. உயிர்களை காக்கின்ற எந்த செயலும் நாம் கடவுள் தன்மை அடைவதற்கு வழி வழிவகுக்கும் அது போல

உயிர்களை வஞ்சிக்கும் எந்த செயலை செய்தாலும்,நாம் எடுத்த அற்புத பிறவியை பாழ்நிலையில் சேர்த்துவிடும்.  சாதி மதம் சமயம் இனம் மொழி என்ற வேற்றுமை பாராமல்,மனிதன் மனிதனாக பார்கின்ற ஆன்மநேயத்தை,அன்பு எனும் உணர்வுகளால் வளர்துகொள்ளுதல் கடவுள் தன்மைக்கு வழியாகும்.

நமக்குள் இச்சையாக் விளங்கும் பொய்,பொறாமை,பேராசை,களவு,உயர்வு,தாழ்வு,கோபம்,உயிர் கொலை போன்ற குணகேடுகள்,அதனால் விளையும் செயல்களையும் நீக்கிக்கொண்டால்,கடவுள் தன்மை பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

நாம் அருள் தன்மை அடைவதற்கு அன்பு , கருணை, சாந்தம்,தானம் போன்ற சத்திய நெறியை வளர்த்துகொண்டால் கடவுள் தன்மை ஆவதற்கு வாய்ப்புண்டு.  பசியால் வாடுகின்ற எவ்வுயிர்க்கும் பசியாற்றுகின்ற ஆன்ம மகிழ்ச்சியை பெற்றுகொள்ளல் வேண்டும்.

பசியாற்றுதல், பிணி போக்குதல்,கல்விக்கு உதவுதல்,மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்ட அன்பு உயிர்களுக்கு உதவுதல் ,எவ்வுயிரையும் அன்பாக வாழவைத்தல் போன்ற பணிகளை செய்கின்ற அன்பர்கள் அற்புதமான அருளை அடைந்து கடவுள் தன்மை அடைவார்கள்.

எந்த இடம், எந்த நாடு, எம்மக்கள்,எம்மொழி என்று பாராமல்,எங்கெங்கு உயிர்கள் வருந்துகின்றனவோ,அவ்வருத்தம் நீங்க பாடுபடுவதும்,அவ்வுயிர்களுக்கு மகிழ்வை கொடுப்பதும்,நாம் கடவுள் தன்மை அடைவதற்கான வழியாகும்.

நாம் தேகத்தையும், உயிரையும்,மனதையும்,பேச்சும்,மூச்சும்,ஒவ்வொரு செயலும் தெய்வீகமாக உணர்ந்துகொள்ளவேண்டும்.  தினம் தோறும் தெய்வீக உணர்வுகளை நினைவாலும்,செயலாலும் உணர்ந்து இருப்போம் ஆனால்,தெய்வீக உணர்வுகளே தெய்வத்தன்மை ஆகிவிடும்.  

எவ்வுயிரையும் உணர்ந்து கொள்ளுகிறவர்கள்  தான், தன்  உயிரை உணர்ந்துகொள்வார்கள் ,தன் உயிரை உணர்ந்துகொண்டவர்கள் தான் கடவுள் தன்மை ஆவார்கள்.

அரிதான பிறவிக்கு வழி 

பசித்துன்பம் பிறவிக்கு பெருந்துன்பம் 
பசியால் வாடுகின்ற உயிர்துன்பம் 
காக்கும் இன்பமே கடவுள் இன்பம் 
கருணையாய் ஆற்றினால் பெருமின்பம் 
அறியாமல் வாழ்பவரோ கோடியுண்டு
அறிவினால் அறிந்தவரே தெய்வம் ஆவார் 
அரிதான பிறவிக்கு வழி இதுதான் 
அறிவித்தோம் மரணமில்லா வாழ்வுதன்னை.
  

No comments:

Post a Comment